செய்திகள்

ஐபிஎல் போட்டியால் உள்ளூர் தொடரை இழக்கிறார் மலிங்கா

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக இருப்பதால் மலிங்கா உள்ளூர் ஒருநாள் தொடரை இழக்க உள்ளார். #MI #SLvSA #Malinga

சமீப காலமாக உடற்தகுதி பிரச்சினைக் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஏலம் போகாத லிசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு ஆலோசகராக நியமனம் செய்தது.

இலங்கை அணி விரைவில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரில் தம்புல்லா அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி வரை மும்பை அணியில் இருக்க வேண்டியதால், உள்ளூர் தொடரில் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT