செய்திகள்

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாலி அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

மாலி அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் யாரும் 50 சதவீதம் வாக்குகள் பெறாததால் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita

மாலை மலர்

தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மந்தமான வாக்குகளே பதிவாகின.

தேர்தல் வன்முறை சம்பவங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் 644 வாக்குச்சாவடிகளை (சுமார் 3 சதவீதம்) பயங்கராவாதிகள் கைப்பற்றி கொண்டதால் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.