செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தெருவில் திரியும் பசுக்களுக்கு தங்குமிடம் - முதல்-மந்திரி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். #BJP #YogiAdityanath

மாலை மலர்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.