தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76824-76827) இன்று மற்றும் 10,17,24 ஆகிய 4 நாட்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில்கள் (வண்டி எண் 56822-56824) இன்று முதல் வரும் 25-ந் தேதி வரை திருச்சி-தஞ்சை இடையே, ஞாயிற்றுக்கிழமை தவிர 20 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56824) வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண் 16234) ஞாயிற்றுக்கிழமை தவிர சோழகம்பட்டி-பூதலூர் இடையே நிறுத்தப்பட்டு சுமார் 1 மணி நேரம் தாமதமாக மயிலாடுதுறை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.