செய்திகள்

குண்டர்கள் தாக்கி இறந்த தலித் மாணவர் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

உ.பி.யில் குண்டர்களால் தாக்கப்பட்டு இறந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் உள்ள கெர்னல்கஞ்ச் பகுதியில் கலிகா ஓட்டலில் சட்டக் கல்லூரி மாணவர் திலீப் சரோஜ் சாப்பிடச் சென்றார். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, குண்டர்கள் தாக்கி உயிரிழந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.20 லட்சம் நிதி அளிக்கப்படும் என உத்தரவிட்ட்டார்.

இந்நிலையில், குண்டர்கள் தாக்கி உயிரிழந்த தலித் மாணவர் திலீப் சரோஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தலித் மாணவர் திலீப் சரோஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்

விஜயசங்கர் சிங் சுல்தான்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தியதில் அவரை இன்று கைது செய்தோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை ஏற்கனவே கைது செய்து விசாரித்து வருகிறோம், என தெரிவித்துள்ளனர். #tamilnews