கைது 
செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் நகை கொள்ளை - வேலைக்காரபெண் கைது

பெண் கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 5 பவுன் நகை-பொருட்களை கொள்ளையடித்த வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் பிரிய ரூபாவதி (வயது 39). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

பிரியரூபாவதி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மல்லி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் ராஜபாளையம் வெங்கடேசன் நகரை சேர்ந்த ராதிகா (30) என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியரூபாவதி வீட் டின் பிரோவை திறந்தார். அப்போது பொருட்கள் சிதறி இருந்தன. அதில் இருந்த 5 பவுன் நகை, கொலுசு, 2 செல்போன்கள் திருட்டுபோய் இருந்தன.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் பிரிய ரூபாவதி புகார் செய்தார். அதில் வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து ராதிகாவிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ராதிகா நகை, பொருட்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 5 பவுன் நகை-பொருட்களை மீட்டனர்.