மங்கல் பிரபாத் லோதா 
செய்திகள்

மகாராஷ்டிராவில் போட்டியிடும் ஏழை வேட்பாளர் - சொத்து மதிப்பு வெறும் 441 கோடி மட்டும்தான்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து ஆறாவது முறை மலபார் ஹில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து மதிப்பு 441 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலை ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.

பல தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கட்சிகளின் பிரசார களமும் சூடு பிடித்துள்ளது.

மும்பை பாஜக தலைவரான மங்கல் பிரபாத் லோதா, தன்னிடம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 252 கோடி ரூபாய் எனவும் அசையா சொத்துகளின் மதிப்பு 189 கோடி ரூபாய் எனவும் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.