செய்திகள்

விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மராட்டிய அரசு அதிரடி அறிவிப்பு

மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாளை நடைபெறவிருந்த விவசாயிகள் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

மராட்டிய மாநிலத்தில் இந்தாண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.

நாளை அனைத்து விவசாயிகளும் ஒன்றினைத்து போராட்டம் நடத்த இருந்த நிலையில், சிறு மற்றும் குறு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில அரசு இந்த முடிவெடுத்துள்ளதாக மாநில வருவாய்துறை மந்திரி பாட்டீல் தெரிவித்துள்ளார்.