மும்பை:
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் நிம்குல் கிராமம் அருகே ஷஹடா-தொண்டைச்சா சாலையில் பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.