செய்திகள்

மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகா புஷ்கரத்தில் மகாளய அமாவாசையொட்டி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாலை மலர்

அதிலும் தற்போது காவிரி மகா புஷ்கர விழா நடை பெற்று வருவதால் காவிரி ஆறு பாயும் இடங்களில் பக்தர்கள் குவிந்து சிறப்பு பூஜை கள் செய்து வருகிறார்கள். மேட்டூர் அணையில் இருந்து இதற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டு செல்கிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர். தாய், தந்தை, பாட்டனார் என்று அவர்களை நினைத்து எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.

இதற்காக சுமார் ஆயிரத் துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களும் அம்மா மண்டபத்தில் குவிந்திருந்தனர். மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சி மாவட்டம் சமய புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களின் இர வில் கோவில் பிரகாரத்தில் தங்கி காலையில் குளித்து விட்டு அம்மனை வணங்கி வந்தால் அந்த பிரார்த்தனை நிறைவேறுவதாக ஐதீகம். அதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சமயபுரம் வந்து இரவு தங்கி காலையில் அம் மனை வணங்கி செல்கின்றனர்.

இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி மாலை 4 மணிக்கு சமய புரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.