இடிந்து விழுந்த பாலம். 
செய்திகள்

165 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மகாடு பாலம் நாளை திறந்து வைக்கப்படுகிறது

165 நாளில் கட்டி முடிக்கப்பட்ட மகாடு பாலம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. பாலத்தை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கின்றனர்.

மாலை மலர்

மும்பை:

ராய்காட் மாவட்டம், மகாடு பகுதியில் இருந்த சாவித்திரி ஆற்றுப்பாலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்று கொண்டு இருந்த 2 அரசு பஸ்கள், கார்கள் ஆற்றுக்குள் பாய்ந்தன. இந்த கோர விபத்தில் சுமார் 29 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது.

புதிய பாலம் ரூ. 37.55 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. 3 வழிப்பாதைகளுடன் அமைக்கப்பட்ட மகாடு பாலப்பணிகள் 6 மாதத்திற்குள் முடிவடைந்துள்ளது. அதாவது 165 நாட்களில் 239 மீட்டர் நீள புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய பாலம் நாளை (திங்கட்கிழமை) பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது.

பாலத்தை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கின்றனர்.