செய்திகள்

ராமநாதபுரம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் உண்டியல் பணம்-நகை கொள்ளை

ராமநாதபுரம் அருகே உள்ள மாந்தோப்பு மகாசக்தி நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

மாலை மலர்

ராமநாதபுரம்:

பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி ரமேஷ் வழக்கம்போல் நேற்று இரவு 8 மணிக்கு நடையை பூட்டிச் சென்றார். இன்று காலை கோவில் வாசலில் கோலம் போட வந்த பெண்கள் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சங்கத்தலைவர் ஜெகந் நாதன் தலைமையில் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகை, உண்டியலில் இருந்த பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. உண்டியலில் ரூ.20 ஆயிரம் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீசில் ஜெகந்நாதன் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையில் வட இந்திய இளைஞர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews