செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு

ஈரானின் கெர்மான் பகுதியில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Iran #Earthquake

பாக்தாத்:

ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொஜெட்க் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேற்று மாலை மிலன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Iran #Earthquake #tamilnews 

SCROLL FOR NEXT