செய்திகள்

அவனியாபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி வீட்டில் கொள்ளை

மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி வீட்டில் நகை மற்றும் செல்போனை மர்ம மனிதன் கொள்ளையடித்துச் சென்றான்.

மதுரை:

அவனியாபுரம் வ.உ.சி. 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவரது மனைவி ஜெயக்குமாரி (வயது 45), மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி.

நேற்று இரவு இவர்கள் வீட்டில் படுத்திருந்தனர். அப்போது யாரோ மர்ம மனிதன் நைசாக வீட்டுக்குள் புகுந்தான்.

அவன், ஜெயக்குமாரி கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்துள்ளான். பின்னர் வீட்டில் இருந்த 4 செல்போன்கள், கைக்கடிகாரம் போன்றவற்றையும் கொள்ளையடித்துச் சென்று விட்டான்.

காலையில் கண் விழித்த ஜெயக்குமார், தங்கச்சங்கிலி மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம மனிதனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT