போரூர்:
மதுரவாயல், பலராம் நகர் குறுக்கு தெருவில் உள்ள காலி இடத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக தீர்த்து கட்டி உள்ளனர். அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை,
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது காதல் தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.