செய்திகள்

டி.என்.பி.எல் - காரைக்குடி காளை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மதுரை பாந்தர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் நேற்று நடைபெற்ற போட்டியில் காரைக்குடி காளை அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணியை வெற்றி பெற்றது. #TNPL2018 #IKKVSMP

மாலை மலர்

அதன்படி காரைக்குடி காளையின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதித்யா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 43 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.

அதன்பின் வந்த ஷாஜகான் 1 ரன்னில் வெளியேறினார். 6-வது வீரராக களம் இங்கிய ராஜ்குமார் 9 பந்தில் 20 ரன்களும், ஸ்ரீனிவாசன் 20 பந்தில் 23 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. மதுரை பாந்தர்ஸ் அணியின் கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசிக், தன்வர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர், 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து களமிறங்கிய சுப்ரமணியம் 2 ரன்கள், தலைன் சற்குணம் 7 ரன்கள் மற்றும் கார்த்திகேயன் 8 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் கார்த்திக் மட்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.