மதுரை:
மதுரையில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய முத்து இருளாண்டி (எ) மந்திரி, சகுனி கார்த்திக் 2 ரவுடிகளை போலீசார் நேற்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துப்பாக்கி சூடு குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்கவுண்டர் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் இருந்து துப்பாக்கிகளை விசாரணைக்காக பறிமுதல் செய்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தில், துப்பாக்கி குண்டு இருந்த காலி உறைகளையும் கைப்பற்றினர்.
மேலும், கொல்லப்பட்ட முத்து இருளாண்டி மற்றும் சகுனி ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் அரிவாளும் அலங்காநல்லூர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என்கவுண்டர் குறித்து டி.ஜி.பி.க்கு மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார். இதேபோல் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமை ஆணையத்திற்றும் அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே என்கவுன்டரில் கொல்லப்பட்ட முத்து இருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, உறவினர் ரவிச்சந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews