மதுரை:
மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 25) என்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன்
வாங்கினார். அந்த கடனை கொடுக்காததால் ஆத்திரத்தில் சரவணன், அவரது நண்பர்கள் மணிபாண்டி, அழகுபாண்டி, நாகபாண்டி, கண்ணன் ஆகிய 5 பேர் சேர்ந்து
விஜயனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயனை குத்தி விட்டு தப்பி விட்டனர். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.