சாலை மறியல் 
செய்திகள்

மதுரை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை:

மதுரை, குசவன்குண்டு அருகே குதிரை குத்தி கிரா மம் உள்ளது. இங்கு குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற் றப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வராத தால் அந்த பகுதி மக்கள் தண்ணீருக்காக 3 கி.மீ. தொலைவில் உள்ள கோனார் பட்டிக்கு சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ஊராட்சி நிர்வாகத் தின் அலட்சியம் காரணமாக குடிநீர் மின் மோட்டர் கட்டணம் கட்டவில்லை. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என தெரியவந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் சட்ட மன்ற உறுப்பி னர் சரவணணிடம் புகார் மனு கொடுத்தனர். அவர் குடிநீரை லாரியில் கொண்டு வந்து பொது மக் களுக்கு வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அந்த லாரி தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விரக்தியடைந்த கிராமமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பெருங் குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அப் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.