செய்திகள்

மதுரை அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை கடத்தல்

மதுரை அருகே பள்ளிக்குச் சென்ற ஆசிரியை கடத்தப்பட்டார். அவரை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை

மதுரை அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகள் பிரியங்கா (வயது 20). அங்குள்ள தனியார் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி பள்ளிக்கு சென்ற பிரியங்கா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். பலன் இல்லை.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தோப்பு ராஜா என்பவரது மகன் செல்வக்குமார் (27) பிரியங்காவை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து எழுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட ஆசிரியையும், கடத்திய வாலிபரையும் தேடி வருகிறார்கள்.