மதுரை:
மதுரை சமயநல்லூரை அடுத்துள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மோகன் (52). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் மோகனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருகிறோம். யாராவது இருந்தால் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர்.
இதனை நம்பிய மோகன் வெளிநாட்டு வேலைக்காக ரூ.60 ஆயிரமும் அதே பகுதியைச் சேர்ந்த ராணி, ஜானகி, சுந்தரேஸ்வரி, மோகனா, அழகேஸ்வரி, தேவி நித்யா ஆகிய 6 பேரிடம் ரூ.3.85 லட்சம் பணத்தையும் மொத்தம் 4.45 லட்சம் பெற்றுக்கொண்டு வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.
இதனால் மோகன் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை நடத்தி முத்து, அவரது மனைவி செல்லம்மாள் மற்றும் தமிழரசி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.