கொள்ளை 
செய்திகள்

மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.4 லட்சம் கொள்ளை

மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரை கே.கே.நகர் ஆர்ச் பகுதியில் தனியார் கிளீனிக் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் வெங்கடேஷ் (வயது 39) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அவர் கிளீனிக்கை பூட்டிச் சென்று விட்டார். மறுநாள் கிளீனிக் வந்த அவர், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கிளீனிக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக அண்ணா நகர் போலீசில் டாக்டர் வெங்கடேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.