செய்திகள்

அரசு வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே உள்ள என்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வீரபாண்டி (33). பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேர அதிக ஆர்வமுடன் முயற்சி செய்தார்.

இதுவரை 6 தடவை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதினார். ஆனாலும் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த வீரபாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை, அக்கம் பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனாலும் வீரபாண்டி பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews