செய்திகள்

கிறிஸ்தவ ஆலயம் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ ஆலயம் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை:

மதுரை கூடல்புதூர் அருகே உள்ள சிக்கந்தர் சாவடியில் கிறிஸ்தவ ஆலயம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பலரும் கண்டம் தெரிவித்தனர்.

ஆலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து, ஆனையூர் பஸ் நிறுத்தம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்துக் கட்சியினர் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, மூர்த்தி எம்.எல்.ஏ., ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான்மோசஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்டச் செயலாளர் கதிரவன் உள்பட 300-க்கும் மேற்பட் டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT