மது 
செய்திகள்

மதுரையில் திருமண விருந்தில் மது குடித்தவர் பலி

திருமண விருந்தில் மது குடித்தவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை:

மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பணக்கொடி. இவரது மகன் அருண் ஜெகவீரன் (வயது 28).

இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு சிலருடன் மது அருந்தி உள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

அவரை பணக்கொடி மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அருண் ஜெகவீரன் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து செல்லூர் போலீசில் பணக்கொடி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.