மதுரை ஆதீனம் 
செய்திகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் - மதுரை ஆதீனம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் தமிழக மக்கள் மாத்திரம் அல்ல, இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் அமைதியை கட்டிக்காப்பாற்ற வேண்டும். அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள். சாதி, மதத்தால் நாம் பிரிந்து விடக்கூடாது. இந்து, இஸ்லாமிய சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கையை இறைவனின் பாரபட்சமற்ற தீர்ப்பைத்தான் 1330 திருக்குறளும் எடுத்துரைக்கின்றன. உலகில் வாழும் அனைவருக்கும் திருக்குறள் வேத நூலாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.