மதுரை ஆதீனம் 
செய்திகள்

மதுரை ஆதீனம் மே தின வாழ்த்து

உழைப்பாளிகளை, தொழிலாளர்களை போற்றி மதித்து அவர்களை நன்கு வாழ வைப்போம். உழைப்பாளிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகத்தில் இப்போது என்ன நடக்கிறது, அடங்கிக் கிடக்கிறது உலகம். மனிதனின் பணம், புகழ், ஆணவம் எதுவும் செல்லாது. கடவுளின் முன்பு அனைவரும் சரணாகதி அடைந்தே தீரவேண்டும்.

ஆம், வெறும் மனித சட்டையை அணிந்து திரியக்கூடாது. மனிதனாக வாழ வேண்டும். இதுவே இறைவனின் தீர்ப்பு- அமைப்பு.

எனவே உழைப்பாளிகளை, தொழிலாளர்களை போற்றி மதித்து அவர்களை நன்கு வாழ வைப்போம். உழைப்பாளிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. தொழிலாளர்கள் இல்லையென்றால் நாட்டில் எந்தவொரு காரியமும் நடை பெறாது. எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்து உழைப்பாளர்களை மதிப்போம். மரியாதை செய்வோம். கொரோனாவை ஒழிப்போம்.

மேற்கண்டவாறு மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.