கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள பால துறையைச் சேர்ந்தவர் ஜோஸ் ஜெனி (வயது 23) தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாதவி இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாதவி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஜோஸ் ஜெனி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் குடும்ப செலவுக்கு பணமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதன் காரணமாக சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த ஜோஸ் ஜெனி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் கதறி அழுதனர். பின்னர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஜோஸ் ஜெனியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.