செய்திகள்

நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் முதலிடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.