சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தனித்தொகுதியில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க சார்பில் ஆர்.டி அரசு 304 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முனுசாமியை தோற்கடித்தார். ஆர்.டி அரசு வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி முனுசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தபால் ஓட்டுகள் எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் எனது வெற்றி வாய்ப்பு பறிபோனது எனவும் முனுசாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில், மனுதாரர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று கோரி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.