சென்னை ஐகோர்ட் 
செய்திகள்

ஜெயலலிதா நினைவு இல்லம் விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது அவசியமா? என உயர்நீதின்றம் கேள்வி எழுப்பியது.

சென்னை போயஸ்கார்டனில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வாழ்ந்த வீடான, வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேதா நிலையத்தை, வெறும் 35 கோடிக்கு அரசு வாங்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.