செய்திகள்

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக  டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கவும் டிடிவி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை  விடுத்து இருந்தார்.

SCROLL FOR NEXT