புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ.வான லட்சுமி நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை. அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்பத்தான் துணை நிலை கவர்னர் செயல்பட முடியும்’ என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் விசாரித்தனர்.
அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.