செய்திகள்

மனோஜ், சயானை 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்படும் மனோஜ் மற்றும் சயானை வரும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kodanadu #ManojSayan #MadrasHC

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையின்போது மனோஜ் மற்றும் சயான் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் முன்னர் ஆஜராகாததால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்த நீதிமன்றம் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவித்திருந்தது. அவர்களை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT