செய்திகள்

நீட் தேர்வு தற்கொலைகள் அரசியல் ஆதாயமாக்கப்படுகிறது - சென்னை ஐகோர்ட் கருத்து

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வதில் அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது என வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். #NEET

மாலை மலர்

சென்னை:

நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு தவறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரனையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தற்கொலைகள் அரசியல் கட்சிகளால் அரசியல் ஆதாயமாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது என கூறினார்.

இந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.