சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக விளக்கமளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் நீக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்களுக்கு எதிராக டி.டி.வி தினகரன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நவம்பர் 29-ம் தேதிக்குள் விளக்கமளிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு உத்தரவிட்டுள்ளது.