மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் 
செய்திகள்

கொரோனா தாக்கி பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - மத்திய பிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு

கொரோனா தாக்கி பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஜுனி இந்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 41 வயதான ஒரு போலீஸ்காரருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, பரிசோதனை செய்ததில், ‘நெகட்டிவ்’, அதாவது கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வெளியானது. ஆனால், சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

மேலும், போலீஸ்காரரின் மனைவி, சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுவதாக அவர் கூறினார்.