செய்திகள்

ம.பி: கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள குஷ் என்ற கிராமத்தில் இருக்கும் கல்லரை அருகே நேற்று அங்குள்ள சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து, அச்சிறுவர்கள் சேர் சிங் என்பவரிடம் இதை கூறியுள்ளனர்.

இச்செய்தியை அறிந்த சேர் சிங் தன் மனைவியோடு கல்லறைக்கு விரைந்தார். அங்கு, அழுகுரல் கேட்டுள்ள இடத்தை தோண்டி பார்த்த போது பச்சிளம் குழந்தை ஒன்று உயிரோடு புதைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், குழியில் இருந்து குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரனையில் குழந்தை ஒரு அடி ஆழத்தில் புதைத்ததாக தெரிய வந்தது. இதையடுத்து, குற்றவாளிகளான குழந்தையின் பெற்றோர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.