செய்திகள்

ம.பி சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சிந்தியா - கமல்நாத் தகவல்

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்லில் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தேர்வு செய்ய மூத்த தலைவர் கமல்நாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

போபால்:

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது.

மத்திய பிரதேச மாநிலத்துக்கு 2018-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தேர்வு செய்ய மூத்த தலைவர் கமல்நாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், 9 முறை எம்.பி.யாக தேர்வான அவர் இதுகுறித்து கூறியதாவது:-

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவே பொருத்த மானவர். இதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கலாம். அவர்தான் கடும் போட்டியை கொடுப்பார். சிந்தியாவின் பெயரை ராகுல்காந்தி முடிவு எடுத்து அறிவிப்பார்.

இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார்.

தற்போதைய சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 166 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 50 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT