செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி அரசு 2 மாதத்தில் கவிழும்: மதுசூதனன் பேட்டி

எடப்பாடி அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும் என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் கூறினார்.

அவனியாபுரம்:

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் விரும்பினால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும். ஓ.பன்னீர் செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்.

நத்தம் விசுவநாதன் குறித்து மேலிடத்தில் தவறான தகவலை தெரிவித்து தான் திண்டுக்கல சீனிவாசன் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அவரை பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT