கிஷ்வார் ட்விட்டர் பதிவில்: "கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை வயநாடு எம்.பி. ஆய்வு செய்யும் விதத்தை பாருங்கள்" என கிண்டலடிக்கும் வகையில் தலைப்பு பதிவிடப்பட்டுள்ளது.
உண்மையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும்போது ராகுல் காந்தி சமோசா சாப்பிட்டாரா என ஆய்வு செய்ததில், மது பூர்னிமா வெளியிட்டிருக்கும் வீடியோ நான்கு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் வைரல் வீடியோ அடங்கிய பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சமோசா சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வீடியோ ஏப்ரல் 24 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவின் வயநாடு எம்.பி. என்ற வகையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராகுல் காந்தி ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ராகுல் காந்தி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோவிற்கும் ராகுல் காந்தியின் வயநாடு ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. வைரல் வீடியோ நான்கு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாகும்.