செய்திகள்

மாதவரம்-சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் 2026-ல் முடிவடையும்

மாதவரம் - சிறுசேரி வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 2026-ம் ஆண்டில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. #MetroTrain

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும், மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

பொதுமக்கள், பயணிகள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.85,049 கோடி செலவில் 3 வழித்தட பாதையில் 107.55 கி.மீ. துரம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டப்பணிகள் வருகிற 2026-ம் ஆண்டில் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக 400 மாநகர இணைப்பு பஸ்கள் விடப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் 1100 சைக்கிள் வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாதவரம் - சிறுசேரி இடையிலான மெட்ரோ திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.85,049 கோடி மதிப்பீட்டில் 107.55 கி.மீட்டர் தூரத்தில் 3 வழித்தட பாதையில் உருவாக்கப்படுகிறது.

வருகிற 2026-ல் இந்த பணிகள் நிறைவடையும் பயணிகள் வசதிக்காக 400 மாநகர இணைப்பு பஸ்கள் விடப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதில் வந்து சேர 1100 சைக்கிள் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain