மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.