கைது 
செய்திகள்

பாலக்கரை பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி டிக்கெட் விற்றவரை கைது செய்தனர்.

திருச்சி:

திருச்சி பாலக்கரை பகுதியில் அதிகமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்ததில் அவரிடம் லாட்டரி டிக்கெட் இருந்தது. விசாரித்ததில் அவர் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் முருகவேல் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT