கைது 
செய்திகள்

வடமதுரை அருகே லாட்டரி விற்றவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மாலை மலர்

வடமதுரை:

வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார் செங்குறிச்சி குரும்பபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி விற்பனை செய்த குடகிபட்டியை சேர்ந்த கோபால் (வயது48) என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கருப்பசாமி எச்சரித்துள்ளார்.