கொண்டலாம்பட்டி:
சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்ற சிவதாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 46), வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (51), பனங்காட்டை சேர்ந்த ரத்தினவேல் (60) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.