அவுரங்காபாத்:
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் 60வது பட்டமளிப்பு விழாவில் அம்மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யரி இன்று கலந்து கொண்டார். நிகழ்வில் ஆளுநர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் நாடு முன்னேற்றம் காணும். கடந்த 30 ஆண்டுகளாக சீனாவில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சீன மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. அது சீனா நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
நாட்டில் ஏராளாமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும், மேலும் உயர்ந்த இலக்குகளை அடைய சிறிய இலக்குகளை அடைவதில் சரியாக செயல்பட வேண்டும்.
உலகம் புதைபடிவ எரிபொருட்களின் சார்புநிலையை குறைத்து, புதிய வளங்களைக் கண்டுபிடித்து வருகிறது. பாரம்பரிய எரிசக்தி பயன்பாட்டை கற்பிக்கும் எங்கள் பாடப்புத்தகங்கள் விரைவில் மீண்டும் எழுதப்படும்,
இவ்வாறு அவர் பேசினார்.