விபத்து 
செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: வக்கீல்-மகன் பலி

நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வக்கீல் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கணேசா ரவுண்டானா சாலையோரத்தில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக துவாக்குடியை சேர்ந்த வக்கீல் ராஜராஜசோழன், அவரது மகன் சேரலாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சேரலாதன் படுகாயங்களுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சேரலாதனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT