செய்திகள்

திருவையாறு அருகே மின் கம்பத்தில் லாரி மோதல்: 5 பேர் உயிர் தப்பினர்

திருவையாறு அருகே இன்று காலை மின் கம்பத்தில் லாரி மோதிய விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மாலை மலர்

திருவையாறு:

திருவையாறு அருகே சடையாண்டி தோப்பு வழியாக செங்கல் லோடு ஏற்றிய ஒரு லாரி இன்று காலை வந்தது. அப்போது மழை பெய்து ரோடு சேறும் சகதியுமாக இருந்ததால் லோடு ஏற்றிய அந்த லாரி நிலைதடுமாறி சென்று ரோட்டோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் தொழிலாளர்கள் உள்பட 5 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.

மின் கம்பி அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.