செய்திகள்

திருவேற்காடு அருகே லாரி டிரைவர் கொலையில் நண்பர் கைது

திருவேற்காடு அருகே கூலிப்பணத் தகராறில் லாரி டிரைவரை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் அன்பு (வயது 35). லாரி டிரைவர். திருவேற்காடு பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலப்பன் சாவடியில் உள்ள ஓட்டல் அருகே அன்பு, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நத்தினார். அப்போது அன்புவுடன் லாரியில் செல்லும் நண்பரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த லோடுமேன் சின்னபையன் கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து மதுரவாய லில் பதுங்கி இருந்த சின்னபையனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

அன்புவுடன் லாரியில் லோடு மேனாக சென்று வந்தேன். இதில் ரூ.1200 கூலிப் பணம் அவர் தரவேண்டும். ஆனால் அன்பு பணத்தை தரவில்லை. இதனால் நான் ஆத்திரத்தில் இருந்தேன்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் அன்பு வந்தார். அப்போது கூலிப்பணம் குறித்து கேட்டபோது கற்களை வீசி என்னை தாக்கினார்.

பின்னர் சிறிது தூரம் நடந்து சென்ற அன்பு போதை மயக்கத்தில் கீழே விழுந்தார். உடனே அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டேன். இதில் அவர் இறந்து போனார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.